திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நல்லூர் அருகே இராமசமுத்திரம் என்ற சிற்றூர் உள்ளது. இவ்வூரில் உள்ள ஒரு பாறையில் 7 வரிகள் கொண்ட முதலாம் பராந்தக சோழன் காலத்தில் எழுதப்பட்ட ஏரிக்கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்களும் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்றுப் பாட ஆசிரியருமான ஜெயவேல்., ஆங்கிலப் பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.


இதுபற்றி அரியலூர் அரசுக்கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் கல்வெட்டு, தொல்லியல் ஆராச்சியாளருமான முனைவர் இல தியாகராஜன் உதவியுடன் இதனைப்படித்த ஆசிரியர்கள் இதன் சிறப்பை தெரிவித்ததாவது, “மதிரை கொண்ட பரகேசரி பரகேரிவர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழர் கி.பி. 907 முதல் 958 வரை மன்னர் இவருடைய 35 ஆம ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதன்படி இதன் காலம் கி.பி. 942 ஆகும். இன்றைக்கு 1078 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழமையுடைய இக்கல்வெட்டு சாத்தனூர் ஏரி பராமரிப்புக்காக காடிவாய் நாழி நெல் கொடுக்கப்ட்டதைக் கூறுகிறது. சாத்தனூர் என்ற பெயர் ராமசமுத்திரம் ஊரின் பழைய பெயராக இருக்கலாம். சமுத்திரம் என்ற சொல் பெரிய ஏரியைக் குறிக்கும் சொல்லாக விஜயநகர காலத்தில் மிகுந்த அளவில் பயன்பாட்டில் இருந்தது. காடி என்ற சொல் தானிய மூட்டை அளவில் கலம் என்ற அளவுக்கு இணையாக தொண்டை நாட்டில் புழக்கத்தில் இருந்தது. ஒரு கலம் நெல் விளைந்தால் ஒரு நாழி நெல் வீதம் ஏரி பராமரிப்புக்கு வரியாக கொடுக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். 




இவ்வாறு நாழி நெல் வீதம் ஒதுக்கி ஆணையிட்டவர் வைதும்ப பாடி பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பவர் ஆவார். இவருடைய இந்த தர்மத்தை ரட்சித்தவர்களின் ஸ்ரீபாதம் என் தலைமேல் என்று இத்தர்மத்தை இறக்குபவர்கள் கங்கையிடை, குமரியிடை, ஏழுநூற்றுகாதம் இடையே செய்தவர்கள் பாவத்தில் போகக்கடவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. சாத்தனூர் என்ற பெயர் காலப்போக்கில் மருவி இராம சமுத்திரம் என அழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு அருகே மிகப்பெரிய பாசன ஏரி உள்ளது. அதற்கான உத்தரவை, அந்த பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பவர் ஆணையிட்டுள்ள தகவல் கல்வெட்டில் உள்ளது. மேலும், இந்த தர்மத்தை செய்யாதவர்கள் பாவத்தில் போவார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. 
வரலாற்றுச்சிறப்புடைய இக்கல்வெட்டை கண்டறிந்துள்ளன. 



கல்வெட்டு ஆய்வு ஆர்வலர்களான ஜெயவேலிடம் கேட்டறிந்தபோது,  ”ஏரிக்கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும்  அல்ல இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது அதில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மத்தவிலாசம் நாடகக் காட்சிகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. பெரியபுராணத்திலிருந்து சண்டேசுர நாயனார் புராணம், மதுரா தூண் கல்வெட்டு, தருமபுரி ஏரிக்கல்வெட்டு, வே.மகாதேவனின் “சிவபாதசேகரன் ராஜராஜசோழனின் தஞ்சைக் கல்வெட்டில் திருப்பதிகம் பாடியோர்,”கட்டுரை, “சிவனின் திருவடிவங்கள்,” டி .கணேசனின் “சிவாகமங்கள்; சுவடிகளும் பாதிப்பும்,” கட்டுரை, மற்றும் ஏராளமான இலகுலீசர் புகைப்படங்களின் பின்னிணைப்பு இவை எல்லாம் இந்த நூல் குறித்து விவாதிக்கும் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்களை முன் வைக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொல்லியல் கல்வெட்டு ஆய்வு ஆர்வலர்களான ஜெயவேல், பாரதிராஜா ஆகியோரை ஊர்மக்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.