இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.
சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பயணிகளின் போக்குவரத்துக்கு ஏதுவாக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
அந்த வகையில், திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை விழாவின்போது, அரக்கோணம்–திருத்தணி வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் வழித்தடத்தில் அரக்கோணம் வரை இயக்கப்படும் சில மின்சார ரயில் சேவைகள், திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களின் பயணத்தை எளிதாக்க தெற்கு ரயில்வே சிறப்பு மின்சார பயணிகளுக்கான ரயில்களை இயக்குகிறது.
இந்த ஏற்பாடு சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை விழாவின்போது, அரக்கோணம்–திருத்தணி வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் வழித்தடத்தில் அரக்கோணம் வரை இயக்கப்படும் சில மின்சார ரயில் சேவைகள், திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு சேவை ஆகஸ்ட் 5 முதல் நாளை 7-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, அரக்கோணத்தில் இருந்து காலை 10.20, மதியம் 1.00, பிற்பகல் 2.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்பட்டு, முறையே காலை 10.40, மதியம் 1.20, பிற்பகல் 3.10 மணிக்கு திருத்தணியை சென்றடையும். அதேபோல், திருத்தணியில் இருந்து காலை 10.50, மதியம் 1.30, பிற்பகல் 3.20 மணிக்கு ரயில்கள் புறப்பட்டு, முறையே பகல் 11.10, மதியம் 1.48, பிற்பகல் 3.38 மணிக்கு அரக்கோணத்தை வந்தடையும்.
ஆடிக் கிருத்திகை விழாவுக்கு செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு இந்த சேவைகளை பயன்படுத்துமாறு சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.
