Thiruparankundram Case: வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வழக்கு போட்டவரை வசைபாடியுள்ளது.

Continues below advertisement

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும், மலையை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரியும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

Continues below advertisement

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் கந்தூரி கொடுப்பது தொடர்பாக அங்கு பிரச்னை தொடங்கியது. பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், பிரச்னைக்குள் இந்து முன்னணியினர் நுழைந்தனர். மலையின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி, காவல்துறை தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். 

இந்த சூழலில், பிப்ரவரி 3 முதல் 4ம் தேதி இரவு வரை அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று போராட்டம் நடத்த இந்து முன்னணியினர் அனுமதி வாங்கினர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் கிராம பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும், ஒற்றுமையாவும், மதசார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் வாழ்ந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டார். மேலும், மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும், அதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்; வசைபாடிய நீதிபதிகள்

இப்படிப்பட்ட சூழலில், திருப்பரங்குன்றம் பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடையை நீக்கக்கோரியும், மலைப்பகுதியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும், இன்னும் பல கோரிக்கைகளையும் வைத்து, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில், மக்கள் சண்டையிடாவிட்டாலும், நீங்களே அவர்களை சண்டையிட வைத்துவிடுவீர்கள் போல இருக்கிறதே என, வழக்கு தொடர்ந்தவர்களை நீதிபதிகள் வசைபாடியுள்ளனர். மேலும், ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் என்றும், நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சமூக ஆர்வலரின் கோரிக்கையை நிராகரித்து, அவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இவ்விவகாரம் தொடர்பான மற்ற வழக்குகள், வெள்ளிக் கிழமையன்று விசாரணைக்கு வர உள்ளன.

 

Continues below advertisement