தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு புரியாத புதிராகவே மாறி வருகிறது. தவெக ஆட்சி அமைய மிகப்பெரிய பலமாக அமைந்தவர் திருமாவளவன். காங்கிரஸ், இந்திய கம்யூனினிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் வினய் முதலமைச்சர் ஆனார்.

Continues below advertisement

திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா:

கூட்டணி ஆட்சியை அமைத்ததுடன் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்தார் விஜய். கூட்டணி கட்சியில் முக்கியமான தலைவரான திருமாவளவன் திமுக-வுடனான கூட்டணி உறவை முறிக்க மிகுந்த தயக்கம் காட்டி வருகிறார். அமைச்சரவையில் இடம்பிடித்த பிறகும் அவர் திமுக-வுடன் சுமூகமாகவே இருக்க விரும்பி வருகிறார். அது தவெக-விற்கு பெரியளவில் நெருடலை உண்டாக்கவில்லை.

ஆனால், சமீபநாட்களாக திருமாவளவன் பொதுவெளியில் கூறும் கருத்துக்கள் தவெக தலைமையை வேதனைக்கு உண்டாக்கி வருகிறது. வைகோவுடன் கருத்து மோதல், திமுக-தவெக பாஜக வை எதிர்க்க ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும், திமுக கூட்டணியை காப்பாற்றியவன் தானே என்று செல்லும் இடமெல்லாம் திமுக மீது கனிவாகவே திருமாவளவன் பேசி வருவது விசிக-வினருக்கே வேதனையை உண்டாக்கி வருகிறது.

Continues below advertisement

பாமக-வுடன் நெருக்கம்:

திருமாவளவன் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது தவெக தலைமைக்கு வேதனையை உண்டாக்கி வருகிறது. இதனால் 4 எம்எல்ஏ-க்களை வைத்துள்ள பாமக-வுடன் தவெக நெருக்கம் காட்டி வருகிறது. தலைமைச் செயலகத்திற்கு வந்த பாமக தலைவர் அன்புமணியை அமைச்சர் ஆனந்த் வாசலுக்கே சென்று வரவேற்றதே விசிக-விற்கு அலர்ட்டாக அமைந்துள்ளது.

தமிழக வரலாற்றில் விசிக-விற்கு முதன்முறையாக அமைச்சரவையில் இடம் அளித்த கட்சி தவெக-வாக இருக்கும் சூழலில், திருமாவளவன் தொடர்ந்து திமுக ஆதரவு நிலைப்பாட்டிலே இருப்பது அந்த கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களுக்கு வன்னி அரசின் அமைச்சர் பதவி பறிபோகுமோ? என்ற கேள்வியையும், சந்தேகத்தையும் உண்டாக்கியுள்ளது.

மாறுகிறதா கூட்டணி?

இதனால், திருமாவளவன் பாெதுவெளியில் திமுக ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த கட்சியினரும், தோழமை கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து திருமாவளவன் திமுக ஆதரவு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தும் வகையில் பொதுவெளியில் கருத்து தெரிவித்தால் கூட்டணியில் இருந்து விசிக நீக்கப்பட்டு, பாமக உள்ளே வருவது உறுதி என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதேசமயம், பாமக-வை கூட்டணியின் உள்ளே கொண்டு வருவதிலும் சிக்கல் உள்ளது. மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அன்புமணி உள்ள நிலையில், அந்த பதவியை பாஜக அளித்தால் அவர் அந்த கூட்டணியிலே தொடர்வார். அப்படி பதவி கிடைக்காமல் தவெக கூட்டணிக்கு வந்தாலும் செளமியாவிற்கு துணை முதலமைச்சர் பதவியை அன்புமணி எதிர்பார்ப்பார் என்பதால் அதுவும் தவெக-விற்கு சிக்கலாகவே அமையும்.