திருச்செங்கோடு தேர் திருவிழாவில், தேர் சக்கரத்தின் இடையே சிக்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று காலை அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரை சாலைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட போது, தேரின் சக்கரத்தின் அருகில் இருந்த சுவற்றுக்கும் இடையே ஹர்ஷவர்தன் (19) என்ற இளைஞர் சிக்கிக்கொண்டார். 

உடனடியாக, அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 

Continues below advertisement

ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு பத்திர பதிவுத்துறை அமைச்சர் யோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆறுதல் கூறினார்.  தொடர்ந்து, அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அருண் ராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் ஹர்ஷவர்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், "திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றார்.

இதையும் படிங்க: "வள்ளுவரை சனாதனியாக்குவதா? ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" கொதித்தெழுந்த சிபிஐ(எம்)

பாதுகாப்பு குறைபாடு காரணமா என்ற கேள்விக்கு? தேரோட்டத்தின் போது ஆர்வ மிகுதியால் தேருக்கு அருகில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. தேர் நேராக சென்று இருந்தால் விபத்து ஏற்பட்டு இருக்காது ஒரு சாய்வாக சக்கரம் திரும்பியதால் சுவற்றிற்கும் சக்கரத்திற்கும் இடையில் சிக்கி இந்த உயிரளப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாக நிகழ்ந்துள்ளது. 

வருங்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என தெரிவித்தார்.