Thevar Jayanthi LIVE: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் மரியாதை

Thevar Jayanthi Guru Poojai LIVE: குரு பூஜை விழாவில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABP NADU Last Updated: 30 Oct 2021 11:41 AM
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜி.கே வாசன் மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன் அஞ்சலி செலுத்தினார், இதனை தொடர்ந்து பேட்டியளித்த அவர்,,, முல்லைப்பெரியாறு அணை லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாடியாகவும் வாழ்வாதாரமாகவும் உள்ளது முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிமைகளை முறைப்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக கேரளா உறவை பலப்படுத்தும் வகையில் கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.





 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அறிவிப்பு இங்கே

"நான் பேசுவது. எழுதுவது. சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே. என் நேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல" என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர். திருமகனார் தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்!


'மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாளத கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல' என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக


முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார் அளனவருக்குமான தலைவர் அவர்


பக்குவப்பட்ட ஒருவன். இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் கிறித்துவ வராகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் - முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்சு எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான்' என்று சொன்ன மதரல்லிணக்க மாமனிதர்!


தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள் கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்" என்று சொன்ன தத்துவஞானி!


'நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் - அதேநேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்" என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை!


"முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்” என்று முழங்கிய தமிழ் ஆளுமை


பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முன்மொழிந்த இந்த முத்து மொழிகளைப் பின்பற்றி நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையாள அஞ்சலி!

மதிமுக சார்பில் வைகோ மரியாதை செலுத்தும் வீடியோ

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில்   தேவரின் 114 வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா,செல்லூர் ராஜூ, காமராஜ்,பாஸ்கர், விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்..


ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஏன் விழாவை புறக்கணித்தனர் என்று திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் விழாவை புறக்கணிக்கவில்லை. ஓபிஎஸ் மனைவியின் திதி நிகழ்வில் இருக்கிறார், இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலை தான் வீடு திரும்பி உள்ளார். மேலும் இன்று சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார். என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Thevar jayanthi OPS : தேனியில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் மரியாதை

கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் 59வது குருபூஜை, 114 வது ஜெயந்தி விழாவை யொட்டி அவரது நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மதிமுக பொது செயலாளர் துரை வையாபுரி, எம்பி வைகே ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை

thevar jayanthi Live Updates: தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் பசும்பொன் தேவர் - மு.க ஸ்டாலின் புகழாரம்


பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள் பங்கேற்பு!

பசும்பொன் தேவர்  நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி, பெரிய கருப்பன்,  பெரியசாமி, தங்கம் தென்னரசு,  சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன, கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன்,  நவாஸ் கனி எம்பி, எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், தமிழரசி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன்,ஆகியோர் உடன் வந்தனர்.

MK Stalin Thevar jayanthi Madurai visit: மருது சகோதரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



 

தேவர் குருபூஜை விழா: சிவகங்கையில் 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காளையாா்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளுக்கு அக்.28 முதல் அக்.30 (இன்று) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thevar Jayanthi LIVE: குருபூஜை விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. குறிப்பாக முதல்வருக்கு திமுகவினா் வரவேற்பு அளிக்கும் மானாமதுரை, பாா்த்திபனூா், அபிராமம் பகுதியில் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.


மேலும் மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குரு  பூஜையையொட்டி, மாவட்டத்தின் சில பகுதிகளில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

Thevar jayanthi Live updates: குருபூஜையில் மரியாதை செலுத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்


Thevar jayanthi Live updates: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்துகிறார்

தேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம்  பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின்  நினைவில்லத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை (9 மணிக்கு) அஞ்சலி செலுத்துகிறார். 


சுதந்திரப் போராட்ட வீரரும் சிறந்த ஆன்மீகவாதியுமான, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 ஜெயந்தி விழா  மற்றும் 59 வது குருபூஜை விழா நேற்று முன் தினம்  அக். 28 ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.29 ந்தேதியான நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது அதில், திருமதி சசிகலா கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். 30ந் தேதியான இன்று குருபூஜையானது அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது

Background

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.இதையொட்டி, அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த பசும்பொன் விரைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக , இன்றைய குரு பூஜை விழாவில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள்/பேனர்கள் வைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தள்ளது.     


 






 


தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு  முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது குரு பூஜையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.


முன்னதாக, நேற்று சசிகலா பசும்பொன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.