பத்திர பதிவு புதிய திட்டம்

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும். அந்த வகையில் நிலம் வாங்குவதை விட பத்திர பதிவு செய்வது மிகவும் கடினமான நடைமுறைகள் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சொத்தை விற்பனை செய்ய வெளியூரில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஆன்லைனில் பத்திர பதிவு

இது தொடர்பாக பத்திர பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும். 

ஆன்லைனில் பத்திர பதிவு செய்வது எப்படி.?

ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு புலனம் (Whatsapp) மூலமும் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்."வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)"நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

Continues below advertisement

அ. சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடியஆவணங்கள்:அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு(First sale of Flat)இ) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்ஈ) வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள்

பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள்,வழக்கறிஞர்கள்

1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை(இரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள்,எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்யவேண்டும்3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப தேவைகள்

1. இணைய இணைப்பு2. UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி3. புகைப்படக் கருவி (Webcam)

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்விபரம்தொடர்பு அலுவலர் பெயர் எண்கள்

வன்பொருள்(Hardware)முகமது யூனுஸ்,அருண்குமார்73975740679940446694

மென்பொருள்(Software)திரு.சீனிவாஸ் கணேஸ் திரு.டில்லி பாபு-6369798973 8525805957