கரூரில் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் வந்து அதிகாரி இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆன்மீக பக்தர்கள்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி குடித்தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆதி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் காட்சி தருகிறார்.
ஆதி மாரியம்மன் ராஜ சிங்க வாகனத்தில் காட்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக 4 -ம் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் திருவிளக்கு பூஜையை அப்பகுதி பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென எதிர்பாராத விதமாக இரவு நேர ஆய்வு பணிக்கு வந்த கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் சரவணன் அங்கு திருவிளக்கபூஜைஏற்பாட்டாளர்கள்வேண்டுகோளுக்கிணங்கதிருவிளக்குபூஜையில்கலந்துகொண்டுதிருவிளக்கஏற்றவைத்துதிருவிளக்குபூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அனைவருக்கும் மரக்கன்றுகளை விழாக்குழுவின் சார்பாக கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் சரவணன் பக்தர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்து தொடர்ச்சியாக திருவளக்கு பூஜை முடியும் வரை பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டார் கரூரில் உள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள செயல் அலுவலர் பொறுப்பேற்று ஏழு மாதங்களில் பல்வேறு ஆலய பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இரவு ரோந்து பணியின் போது பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று திருவிளக்கு பூஜையை கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு அங்கு இருந்த விழா ஏற்பாளர்கள் மற்றும் திருவிளக்கு பூஜைகள் கலந்து கொண்ட பெண் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு நறுமண பூக்களால் அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பஞ்ச கற்பூர ஆலத்தையுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial