நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா, அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வது போன்ற வீடியோ அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் டுவிட்டரில் இன்று காலை பதிவு செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த பதிவை அமைச்சர் நீக்கிய நிலையில், அது தொடர்பான கடுமையான விமர்சனம் எழுந்தது. அனிதாவின் சகோதரர் மணிவண்ணன் அது குறித்து அரியலூர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். இந்நிலையில் தனது பதிவு குறித்து அமைச்சர் பாண்டியராஜன் வீடியோ பதிவு ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a >pic.twitter.com/70uw98WVpy</a></p>— Pandiarajan K (@mafoikprajan) <a >April 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அதில், தனது டுவிட்டரில் இடம் பெற்ற அனிதாவின் வீடியோ பதிவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், யாரையும் கலங்கப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ள அமைச்சர் பாண்டியராஜன், தனது டுவிட்டர் பதிவுக்கு காரணமானவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.