செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். 


சிறை மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாதா..? 


செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேடே சிகிச்சை அளிக்க முடியாதா.? செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியை கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். 


அதற்கு விளக்கமளித்த செந்தில் பாலாஜி தரப்பு, ”வழக்கு ஆவணங்கள் அமலாத்துறையிடம் உள்ளபோது சாட்சிகளை எப்படி கலைக்க முடியும். நீதிமன்றமே மருத்துவரை நியமித்து உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம்” என தெரிவித்தது. அப்போது அமலாக்கத்துறை, “ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கைபடி செந்தில் பாலாஜி வெளிமருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையில்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சை தர முடியாது என்ற நிலை இருந்தால் மருத்துவ காரணத்திற்கு ஜாமீன் தரலாம். செந்தில் பாலாஜியிடமிருந்து கைப்பற்றிய ஆவணங்களின்படி ரூ. 67 கோடி சட்டவிரோத பணம் இருப்பதாக தெரிகிறது.” என தெரிவித்தது. 


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.