அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக போலீசாரிடம் மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும்  நடிகையுடன் தென் மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலில் மணிகண்டன் தங்கியிருந்ததற்கான ஆதாரமும் சிக்கியது. தற்போது புழல் சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவரின் வாக்குமூலம் மேலும் ஆதாரமாக அமைந்துள்ளது.


முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக புகார் அளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை இரண்டாவது திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், அவரால் மூன்று முறை தான் கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். ஆனால், தற்போது தன்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.




நடிகை சாந்தினியின் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது சென்னை அடையாறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் மணிகண்டன் தலைமறைவானார்.


பின்னர், அவரை போலீசார் கடந்த 20ந் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர், நீதிமன்றத்தில் நடிகை சாந்தினியும், அவரும் ஒருவரை ஒருவர் தெரிந்தே பழகியதால் மணிகண்டன் மீதான பாலியல் குற்றச்சாட்டு பிரிவில் இருந்து இந்த வழக்கை மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரை சைதாப்பேட்டை சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு பல்வேறு சொகுசு வசதிகள் அளிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, சைதாப்பேட்டை சிறையில் மேற்கொண்ட ஆய்வில் அவருக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.




இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும், அவருக்கு சைதாப்பேட்டை சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காலவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ள துணை நடிகை சாந்தினி நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தென்னிந்தியாவிற்கான மலேசியாவின் தூதரக அதிகாரியும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார் என்பதும், பின்னர் அவரை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை ராமநாதபுரம், மதுரையில் தீவிரமாக போலீசார் தேடி, அதன் பின்பு கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.