இன்றைய சூழலில் நாடு முழுவதும் மின் வாகனப்பயன்பாட்டிற்கு மாறிவரும் நிலையில், அதற்கேற்றால் பல வடிவங்களில் வாகனங்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துவருகின்றனர். கார், இருசக்கர வாகனம் என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மகேந்திர நிறுவனம் ட்ரியோ என்ற மின்சார ஆட்டோவை அறிமுகம் செய்தது. லித்தியம் அயர்ன் பாட்டரி உதவியுடன் மின்சக்தியில் இயங்கும் இந்த ட்ரியோ வகை ஆட்டோ, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற நீடித்த தன்மைக் கொண்டதாக உள்ளதால் மக்கள் அதிகளவில் இந்த ஆட்டோவை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் எனக்கூறப்படுகிறது.


 






இந்நிலையில் தான் ”சிறந்த தொழிலதிபரும், கோடீஸ்வரனுமான ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ட்ரியோ ஆட்டோ குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், தற்போது மகேந்திரா நிறுவனம் தீவிர மேம்படுத்தப்பட்ட ட்ரியோ ஆட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும், மணிக்கு 55 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மின்சார ஆட்டோவை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 125 கிமீ வரை பயணம் செய்யமுடியும். மேலும் அனைவருக்கும் சிறந்த பயணத்தை வழங்குவதால் இந்த ஆட்டோவை நான் ஓட்ட விரும்புகிறேன் எனவும் ஆனால் என்னிடம் சில பரிந்துரைகள் உள்ளதாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.


இதன்படி, மற்றொரு டிவிட்டர் பதிவில், இந்த எலக்ட்ரிக் ஆட்டோ பார்ம் பேக்டர் மற்றும் மலிவு விலையில் அதவாது ரூ. 3.5 லட்சத்திற்கு கிடைக்கின்றது. மேலும் குடும்பத்தினர் அனைவரும் பயணிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு மாற்றும் போதும், குறைவான விலைக்கு கிடைக்கும் போது மக்களிடம் இன்னமும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதோடு நான் பல்வேறு கிராமப்பகுதி சாலைகளில் ஆட்டோவை ஓட்டிச்செல்லும் போது இது எங்கே கிடைக்கும் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். எனவே குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எலக்ட்ரிக் ஆட்டோவில் பல விதமான வடிவமைப்புகளையும், வண்ணங்களையும் வழங்க வேண்டும் என மகேந்திரா நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளார். மேலும் இந்த குறைந்த விலை வாகனத்தைப்பிரபலப்படுத்த சிறந்த சந்தைப்படுத்துதல் பிரச்சாரத்துடன் மக்களை அணுகினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நானும் இந்த வாகனத்தை ஓட்ட விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.





இவரின் இந்தப்பதிவைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப்பதிவிட்டுவருவதோடு, மறு பதிவிட்டும் வருகின்றனர். குறிப்பாக தனித்தன்மையான ஸ்டைல், சிறந்த செயல்திறன் கொண்ட ட்ரியோ ஆட்டோ மூலம் ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதில் D+3, D+4, D+5 இருக்கை வசதிகள் உள்ளது. இதில் லித்தியம் அயர்ன் பாட்டரி 1.5 லட்சம் கிமீ வரை ஓடும் ஆற்றல் கொண்டது. ஆட்டோக்களில் பெரிய வீல்பேஸ் இருப்பதால், விசாலமான கேபின் கொண்டதாக இந்த ஆட்டோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுப்போன்று பல்வேறு மக்களுக்குத்தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.