கொரோனாவால் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா வருவதற்கு முன்பே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆண்டு அறிக்கை உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


மேலும், 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. 2011-16 ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டிற்கு 17 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலங்கள் நிதிநிலையை சரியாக கொண்டிருந்ததால் கொரோனா காலத்தில் சொல்லும் அளவிற்கு அவர்கள் நிதிநிலையை பள்ளத்தில் தள்ளவில்லை
2011-16இல் வருவாய் பற்றாக்குறை 17ஆயிரம் கோடி. 2016-21இல் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி குறைய உதய் திட்டமும் காரணம் ஆகும். மொத்த வருமானம் உற்பத்தியில் 13.35 % இருந்த நிலையில் தற்போது 8.7%ஆக குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.


 






மாநில வரி வருமானம், வரியில்லா வருமானம், மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய வரி பங்கு, மத்திய அரசின் திட்ட மானியம் ஆகியவற்றில் மாநில வரி வருவாயில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2006-11ல் 13 சதவீதம் அதிகரித்தது. கடந்த 5 ஆண்டுகளில் 4.65 சதவீதமாக சரிவு ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படாதால் குறைவாக உள்ளது. வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்?. ஜீரோ பட்ஜெட் என்பது அர்த்தமற்றது.  சரியான வரி வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும். சரியான அளவு வரி, சரியான நபர்களிடம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்” என்றார்.