தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலுள்ள நூலகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பைபிள் கடந்த 2005-ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பைபிள் எங்கு இருக்கிறது என்பது தொடர்பாக தேடப்பட்டு வந்தது. 


இந்நிலையில் 2005ஆம் ஆண்டு தஞ்சாவூரில் காணமல்போன பைபிள் தற்போது லண்டனில் அரசர் வைத்துள்ள பொருட்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதை தமிழ்நாட்டு காவல்துறையின சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிஐடி பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பைபிளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை சிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழில் முதல் முறையாக மொழி பெயர்க்கப்பட்ட பைபிள் இது என்பதால் பலரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 






பைபிள் வரலாறு:


1706ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார். அவர் தமிழ்நாட்டில் ஒரு அச்சகம் அமைத்து தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களை அச்சடிக்க தொடங்கினார். 1715ஆம் ஆண்டு இவர் நியூ டெஸ்டாமெண்ட் என்ற பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார். இந்தப் பைபிளை சார்வட்ஸ் என்ற மற்றொரு கிறிஸ்துவ தூதர் தஞ்சாவூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த செர்ஃபோஜி மன்னரிடம் கொடுத்ததாக கூறப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்த அரிய வகை பைபிளை தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைத்திருந்தது. 


இந்த பைபிள் 2005 ஆண்டு முதல் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனது. இது தொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனினும் அப்போது சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு இந்த பைபிள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தஞ்சாவூரில் காணாமல் போன பைபிள் படமும் தற்போது லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களில் உள்ள பைபிள் படமும் ஒன்றாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது அந்த பைபிளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து மீண்டும் தஞ்சாவூர் சரஸ்வதி மாளிகையில் வைக்க பணிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண