கரூர் அருகே பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் ஊட்டி கொண்டாடிய தலைமை ஆசிரியை - சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலான நிலையில் 2 ஆசிரியர்கள் தற்காலில பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு.



கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்து பங்களாபுதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் இந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக மணிகண்டன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 


 


 





இவருக்கு கடந்த 16.06.2022 அன்று பிறந்தாள். இதனை முன்னிட்டு அப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதில் முதல் கேக் துண்டை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர் மணிகண்டனுக்கு ஊட்டி விட்டுள்ளார். 


இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன்  ஆசிரியர் மணிகண்டன், தலைமை ஆசிரியை சித்ரா தேவி ஆகிய இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


 


 




பள்ளியில் தலைமையாசிரியை சக ஆசிரியருக்கு கேக் ஊட்டிவிடும் புகைப்படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மாணவர்களும் நல்லொழுக்கத்தை பள்ளியில் இருந்தேன் வளர்ப்பார்கள்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


 


ஆகவே, பள்ளியின் ஆசிரியர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை  பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் கொடுத்து நல்லொழுக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 




ஆசிரியர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை சக ஆசிரியருக்கு கேக் ஊட்டிவிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


எனினும் தவறு யார் செய்தாலும் தண்டிக்க வேண்டிய நிலையில் மாவட்ட கல்வித்துறை செயல்பட வேண்டும் என கூறியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் மணிகண்டன் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.