தமிழக அரசிற்கு முக்கிய வருவாய் தரும் கடையாக விளங்குவது டாஸ்மாக் மதுபானக் கடைகள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது மதுபானக் கடைகளில் மது விற்பனை கோடிக்கணக்கில் நடைபெறும். இந்த பொங்கல் பண்டிகைக்கும் மது விற்பனை கோடிக்கணக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி வரும் 15-ந் தேதி ( சனிக்கிழமை) பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் திருவள்ளூர் தினம் என்பதால் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு நாள் என்பதால் அன்றைய தினமும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் மதுபானக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று தினங்கள் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, குடிமகன்கள் அதற்கு முந்தைய தினங்களிலே மதுபானக் கடைகளில் அலைமோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள் திருவள்ளூர் தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகளில் கடும் கூட்டம் மோதும் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.




கொரோனா, ஒமிக்ரான் பரவல் அச்சத்தின் காரணமாக சமூக விலகல், முகக்கவசம் கட்டாயம் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் மதுபானக் கடைகளில் கூட்டம் கூடாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண