DMK alliance : திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
DMK alliance : திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் தொகுதிகளை ஒதுக்காத பட்சத்தில் கூட்டணியில இருந்து வெளியேறுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல்- தொகுதி பங்கீட்டில் இழுபறி
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடையாமல் இழுபறியாக நீடித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விட 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக புதிய கட்சிகள் இணைந்துள்ளது. அந்த வகையில் தேமுதிக, மநீம, எஸ்டிபிஐ, கருணாஸ், தனியரசு, தமிம்முன் அன்சாரி ஆகியோரின் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியாமல் கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தொகுதியை குறைத்த திமுக
ஆனால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் திமுகவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு என நிபந்தனை விதித்தது. ஒரு கட்டத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை வந்ததையடுத்து காங்கிரஸ் மேலிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்தமுறை கொடுத்த 25 தொகுதிகளை விட கூடுதலாக 3 தொகுதிகள் கொடுக்க வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டது. அதேநேரம் கடந்தமுறை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்த 3 தொகுதியில் இருந்து 2 தொகுதியாகவும், மதிமுகவிற்கு கொடுத்த 6 தொகுதிகளில் இருந்து 4 தொகுதிகளாகவும் குறைத்து வழங்கப்பட்டது.
கூடுதல் தொகுதி ஒதுக்கனும்
இதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதியில் இருந்து 5 தொகுதிகளாக குறைக்க திமுக திட்டமிட்டது. அந்த வகையில் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என விடாப்பிடியாக நின்றது. காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு மட்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியும் என்றால் எங்களுக்கும் ஒதுக்கவ வேண்டும் என தெரிவித்தது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அடுத்ததாக என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்ற கேள்வியானது எழுந்துள்ளது. இந்த நிலையில் மற்றொரு கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது.
திமுக கூட்டணி- வெளியேறும் தவாக
அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடந்தமுறை ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதும் ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிருப்தி அடைந்த தவாக தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடுதல் தொகுதிகள் வழங்குவது தொடர்பாகவும், தவாகவின் முக்கிய கோரிக்கை தொடர்பாக திமுக தலைமையிடம் மனு கொடுத்துள்ளோம். எனவே அதனை நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் எங்களுக்கு தொகுதிகளை விட கோரிக்கை தான் முக்கியம் எனவே எங்களது கோரிக்கை ஏற்காத பட்சத்தில் பாஜக இல்லாத கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















