மக்களே எச்சரிக்கை! நாளை 17 மாவட்டங்களில் 100 ஐ தாண்டும் வெயில்: லிஸ்ட் இதோ

TN Weather: தமிழ்நாட்டில் தொடர்ந்து வெபப்நிலை அதிகரித்து வரும் நிலையில், நாளை காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்ட வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

100ஐ தாண்டும் 17 மாவட்டங்கள்:

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, கரூர், கோவையில் வால்பாறை, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், நாளை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெப்பநிலையானது தாண்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பகல் பொழுதில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும், அத்தியாவசிய தேவையின் காரணமாக வெளியே செல்ல வேண்டி இருந்தால் குடையுடன் செல்லுங்கள். இந்த பகுதிகளில் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும் காரணத்தால், அடிக்கடி நீர் அருந்துவது மூலம் , உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள முடியும். 

Continues below advertisement

கடந்த 24 மணி நேரத்தில் வானிலை:

கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலையில், அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 38.6° செல்சியஸ் ( 101.4 பாரன்ஹீட் ) பதிவாகியுள்ளது. மழை நிலவரமானது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. பதிவான மழையை பொறுத்தவரையில், “ விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 8 செ.மீ அளவும், தேவாலா (நீலகிரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 3, வால்பாறை PAP (கோயம்புத்தூர்)" தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), உபாசி TRF AWS (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2, குந்தா பாலம் (நீலகிரி) 1 செ.மீ அளவு மழை பெய்துள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை:

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

27-03-2025 மற்றும் 28-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

01-04-2025 மற்றும் 02-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

இன்று (27-03-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-03-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement