தமிழ்நாட்டில் இன்று இரவு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   


25 மாவட்டங்கள்:


கன்னியாகுமரி, கரூர் , நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் , தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 25 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 






 


இந்நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது , தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல்  ஒரு கீழடுக்கு  சுழற்சி நிலவுகிறது.  



25.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.



திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.



26.10.2024: தமிழகத்தில் ஒரு சில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.



தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



27.10.2024 முதல் 31.10.2024 வரை:  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.



சென்னை வானிலை முன்னறிவிப்பு: 



அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில  பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கு எச்சரிக்கை:   



தமிழக கடலோர பகுதிகளில்  25 .10.2024 முதல் 29 .10.2024 வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை  ஏதுமில்லை.



வங்கக்கடல் பகுதிகள்:



• வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-10-2024  மாலை வரை சூறாவளிக்காற்று  மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மேற்கு வங்கம்  மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் 25-10-2024  மாலை வரை சூறாவளிக் காற்று  வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், மணிக்கு 80  முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  அதன் பிறகு காற்றின் வேகம்  படிப்படியாக குறையக்கூடும்.
• 
25-10-2024  மாலை வரை சூறாவளிக் காற்று  தெற்கு  ஒடிசா கடற்கரை பகுதிகளில், மணிக்கு 60  முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  அதன் பிறகு காற்றின் வேகம்  படிப்படியாக குறையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.