✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

TN RAIN: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா?

செல்வகுமார்   |  13 Apr 2024 05:13 PM (IST)

Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை ( கோப்புக்காட்சி )

 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை:

தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலானது வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சில நாட்களாக, சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து  வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய  15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த 15 மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது எனவும், இதனால் சில இடங்களில் சாலைகள் வழுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே, வெயில் சற்று அதிகமாகுவதே மக்கள் உணர ஆரம்பித்தனர். நண்பகல் நேரங்களில், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க ஆரம்பித்தனர். 

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதை காண முடிகிறது. இந்த மழையானது, வெப்பத்தை சற்று தணித்துள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Published at: 13 Apr 2024 04:33 PM (IST)
Tags: breaking news Abp nadu Weather #tamilnadu RAIN
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • TN RAIN: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.