தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ”தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,


17.09.2022 முதல் 19.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 






20.09.2022 மற்றும் 21.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 35-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


 






கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 5, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) 4, புழல் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 3, திருத்தணி PTO (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 2, சோழவரம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 1


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


19.09.2022: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேசுத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


 






20.09.2022 மற்றும் 21.09.2022: மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


 






மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.