தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 120 கி.மீட்டர் தொலைவிலும், கோபால்பூரில் இருந்து தெற்கு – தென்மேற்கு திசையில் நிலை கொண்டிருந்தது. அதிகாலை 12.30 மணி முதல் காலை 2.30 மணிக்குள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.

அடுத்த 3 மணி நேரம்:


தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.






மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தககவல் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருவதால் ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மேலும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை தற்போது வரை சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வரத்து போதியளவு உள்ளது.