திருத்தணியில் இதுவரை இல்லாத அளவில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெப்பத்தால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். 


தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வெயில் கொளுத்தியது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.


18 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்:


தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் வெயிலின் அளவானது சதத்தை தொட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கத்தால், மக்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 


வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் ,


மதுரை 104 டிகிரி பாரன்ஹீட்,


நாகை 103 டிகிரி பாரன்ஹீட்,


திருச்சி 102 டிகிரி பாரன்ஹீட்,


காரைக்கால் 101 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. 


இந்நிலையில், வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, 


தென்தமிழக  பகுதிகளின்  மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று, தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


நாளை தமிழகத்தில்  ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஜூன் 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதி, தமிழகத்தில்   ஒருசில   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


வரும் ஜூன் 3 ஆம் தேதி, தமிழகத்தில்   ஒருசில   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜூன் 4 மற்றும் 5 ஆம் தேதி, தமிழகத்தில்   ஓரிரு   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.