SIR Online Form: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் நடைமுறைக்கான ஆவணத்தை, ஆன்லைனிலேயே சமர்பிக்கும் வசதிக்கான வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பட்டியல்:

தேர்தல் ஆணையம் தற்போதைய பிரதான நடவடிக்கையாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல், விவரங்களை புதுப்பிப்பது மற்றும் புதிய வாக்காளர்களை இணைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பீகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து, போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இதற்கான ஆவணத்தை வாக்காளர்கள் நேரில் மட்டுமே கொடுக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது ஆன்லைனிலும் சமர்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

SIR படிவத்தை அணுகுவது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) வாக்காளர் போர்டல் : SIR படிவம் உட்பட, வாக்காளர்களுக்காக பல்வேறு படிவங்களில் ஒன்றைப் பூர்த்தி செய்ய அல்லது சமர்ப்பிக்க அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவைகள் போர்ட்டலை அணுகவும்.

தனிப்பட்ட மாநில பதிப்பு CEO வலைத்தளங்கள் : அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கென சொந்த தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கான வலைத்தளங்களைக் கொண்டுள்ளன. 

உதாரணமாக , தமிழ்நாட்டு மக்கள் TN CEO என தேடி வலைதளத்தை அணுகினால் SIR மற்றும் அதில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.  எந்தவொரு தனிப்பட்ட தகவல் அல்லது ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் முன், அது ஒரு அதிகாரப்பூர்வ ".gov.in" வலைத்தளம் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

SIR படிவத்தை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்:

  • தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான voters.eci.gov.in என்ற பக்கத்தை அணுகவும்
  • திரையில் தோன்றும் வலைதளத்தில் வலதுபுற ஓரத்தில் உள்ள ”Fill Enumeration Form” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
  • தேர்தல் ஆணைய தளத்தில் ஏற்கனவே கணக்கு இல்லாவிட்டால், SIGN UP ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்யுங்கள்
  • இதையடுத்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபி-யை உள்ளீடு செய்து, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள EPIC எண் மற்றும் தொகுதி விவரங்களை சமர்பித்து பதிவு நடைமுறையை பூர்த்தி செய்யுங்கள்
  • இதையடுத்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து அதற்கு வரும் ஒடிபியை அளித்து, தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் நுழையவும் 

மொபைல் எண்ணை இணைக்காமல் இருந்தால்?

வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்களது செல்போன் எண் இணைக்காமல் இருந்தால், நீங்கள் படிவம் 8-ஐ நிரப்ப வேண்டி இருக்கும். கவலை கொள்ள வேண்டாம், இதற்கு வெறும் 2-3 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 

  • தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரியும் “Click Here” என்ற பட்டனை க்ளிக் செய்து "Apply For Correction" என்பதை தேர்வு செய்யவும்
  • குறிப்பிட்ட இடத்தில் உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்
  • ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு நீங்கள் ஆன்லைனிலேயே கையொப்பமிட வேண்டி இருக்கும். இதன்பிறகு வரும் ஒடிபியை உள்ளீடு செய்தால் வாக்காளர் அட்டையுடன் உங்களது மொபைல் எண் இணைக்கப்பட்டு விடும்.

SIR படிவத்தை நிரப்புவது எப்படி?

லாக் - இன் செய்து தேர்தல் ஆணையத்தின் வசதிகளை அணுகுவதற்கான பக்கத்தை அடைந்தது, ”Fill Enumeration Form” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து தமிழ்நாடு மாநிலத்தை தேர்வு செய்யுங்கள். பிறகு உங்களது EPIC எண்ணை பதிவிட்டு தேடினால், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களது முழு விவரங்களையும் திரையில் காணலாம். அதன் அடிப்படையில் வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

சூழல் 1 - 2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்

  • முதல் ஆப்ஷனை தேர்வுசெய்க
  • உங்கள் 2002 சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி மற்றும் வரிசை எண்ணைப் பயன்படுத்தி தேடுங்கள்
  • உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால், Continue பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
  • பிறந்த தேதி, ஆதார் எண், தந்தை/தாய்/துணைவரின் பெயர் போன்ற உங்கள் விவரங்களை நிரப்பி, உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
  • இறுதியாக, உங்கள் முகவரி விவரங்களை வழங்கி "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்

சூழல் 1 - 2002 வாக்காளர் பட்டியலில் உறவினரின் பெயர் இருந்தால்

  • இரண்டாவது ஆப்ஷனை  தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி ஆகியோரின் 2002 வாக்காளர் விவரங்களைப் பயன்படுத்தி தேடி, சரியான உறவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அவர்களின் விவரங்கள் சரியாக இருந்தால், Continue பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
  • பின்னர், சூழல் 1 இல் உள்ளதைப் போலவே, உங்கள் அனைத்து விவரங்களையும் (பிறந்த தேதி, தந்தையின் பெயர், புகைப்படம் போன்றவை) நிரப்பி படிவத்தை சமர்ப்பிக்கவும்

சூழல் 3: உங்கள் பெயரோ,  உறவினரின் பெயரோ 2002 பட்டியலில் இல்லாவிட்டால்

  • மூன்றாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • இந்த சூழலில், 2002 ஆம் ஆண்டு முதல் எந்த விவரங்களையும் நீங்கள் வழங்க வேண்டியதில்லை
  • நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தை பதிவேற்றினால் போதும்.
  • இந்த முறையில் எந்த ஆவணங்களையும் பதிவேற்றும் விருப்பம் இல்லை. தேவையான ஆவணங்கள் தொடர்பான தகவலுக்கு, உங்கள் தேர்தல் அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்
  • அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு, "சமர்ப்பி" பொத்தானைக் கிளிக் செய்யவும்