- டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
- சுதந்திர தின விழா: புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- "கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் ஓபிஎஸ்" இபிஎஸ்க்கு தலைமைப் பண்பு இல்லை என்ற ஓபிஎஸ் விமர்சனங்களுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி
- சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுகளில் சிறந்த மாநகராட்சிகளுக்கான பட்டியலில், ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார் - அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை
- புதுச்சேரியில் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கிய திருச்சியைச் சேர்ந்த ஜோசப் என்பவரை, போலீசார் பத்திரமாக மீட்டனர்
- சி.வி.சண்முகம் செலுத்திய ரூ.10 லட்சம் அபராதத் தொகை கல்வராயன் மலை மக்களின் சுகாதார நலத்திட்டங்களுக்கும் அங்கு நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் - முதல்வரின் முகவரித் துறை
- "துரைமுருகன் அதிமுகவில் இருந்தால் எங்கேயோ போயிருப்பார்" - ஈ.பி.எஸ்
- நாகையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி.. தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினர்
- 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சாரை சாரையாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்..
Tamilnadu Roundup: சென்னையில் கொடியேற்றிய முதல்வர் ஸ்டாலின்! விடுமுறை - படையெடுத்த மக்கள் - 10 மணி செய்திகள்
ஜேம்ஸ் | 15 Aug 2025 10:05 AM (IST)
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
Published at: 15 Aug 2025 10:05 AM (IST)