தமிழ்நாட்டில் இன்று கோவை விருதுநகர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
Also Read: Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?
Also Read: பஞ்சாயத்து முடிஞ்சது போங்க! இபிஎஸ்-க்கு சமாதான கொடி காட்டிய செங்கோட்டையன்: நடந்தது என்ன?
அடுத்த 6 தினங்களுக்கான வானிலை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இந்நிலையில் நாளை ( 15-04-2025 ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு:
15-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
16-04-2025 முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை வானிலை :
நாளை (15-04-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.