23 மாவட்டங்கள்:


திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர் , நாகை , மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் விருதுநகர், மதுரை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனி ஆகிய 23 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Also Read: School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!



தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு


05-12-2024 முதல் 09-12-2024 வரை: 



தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை வானிலை முன்னறிவிப்பு:



அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.