தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. இந்த 38 மாவட்டங்களில்  37 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும்தான் இன்று இரவு வாய்ப்பு இல்லை என வானிலை தகவல் தெரிவிக்கின்றன. மழை பெய்ய வாய்ப்பு குறைவான, அந்த மாவட்டம்தான் வேலூர். 






இந்நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததாவது, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.



கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் , தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



நவம்பர் 16 முதல் நவ.17 வரை:



தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னை மற்றும்.புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:



அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.






மீனவர்களுக்கு எச்சரிக்கை


இன்று, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூராவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


Also Read: Chandrayaan-2: மோதும் நிலைக்குச் சென்ற சந்திராயன் 2- கொரிய ஆர்பிட்டர்: சமயோசிதமாக செயல்பட்ட இஸ்ரோ.! நடந்தது என்ன?