TN Rain: வீட்டைவிட்டு வெளியே வராதீங்க!..இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு

Tamilnadu Rain Updates Today: தமிழ்நாட்டில் இன்று இரவு வேலூர், சேலம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், திருப்பூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு 11 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

Also Read:வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை நிலவரம்:

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலயில், அடுத்த 7 தினங்களுக்கு வானிலை நிலவரம்  குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. 

நேற்றைய தினம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை அதே பகுதிகளில் வலுவிழந்தது.மேலும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து 13-04-2025 முதல் 17-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் 'காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola