Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம். 


அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு:



மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக வரும் 23-ஆம் தேதி வாக்கில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



22.09.2024 முதல் 24.09.2024) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 



25.09.2024 மற்றும் 26.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



27.09.2024 மற்றும் 28.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:



அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்த வெப்பநிலை 27-28' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வா அதிகபட்ச 33-34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.