தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் அடுத்த  3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


29 மாவட்டங்களில் மழை:


அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இன்று இரவு 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி, நெல்லை, குமரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் , தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 






 


உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி:


இந்நிலையில் வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “மத்தியமேற்கு  மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இது அடுத்த 2 – 3 தினங்களில் சற்று வலுப்பெற்று  ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழை முன்னெச்சரிக்கை:


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,


18.07.2024:   தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும்;  கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


19.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்;  கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


20.09.2024 முதல் 24.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.