TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணிவரை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


27 மாவட்டங்களில் மழை:


இந்நிலையில், இன்றைய வானிலை அறிவிப்பு குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, இன்றைய நாள் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


 







வானிலை அறிக்கை:


இதையடுத்து, வானிலை குறித்து விரிவாக வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.