தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில், இன்று இரவு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், கோவை, சிவகங்கை, வேலூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 தினங்களுக்கு வானிலை
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இந்நிலயில் தமிழ்நாட்டின் அடுத்த 6 தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்
தமிழகத்தில் நாளை 19-04-2025 ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை தொடர்ந்து 20-04-2025 முதல் 24-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: ரூ.50 கோடிக்கு நாயா!..வீட்டுக்கே சென்ற ED: கடைசியில்தான் டிவிஸ்ட்!
அதிகபட்ச வெப்பநிலை :
தமிழகத்தில் 18-04-2025 முதல் 20-04-2025 வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதையடுத்து 21-04-2025 மற்றும் 22-04-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை :
சென்னையை பொறுத்தவரை நாளை (19-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸ் ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.