தமிழ்நாட்டில்,மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு சரி செய்யப்படும். இந்நிலையில், நாளை ஏப்ரல் 19ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை: 19-04-2025

இந்நிலையில், திருச்சி மற்றும் பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதனால், திருச்சியில் நாளை பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

திருச்சியில் நாளை, கம்பரசம்பேட்டை பகுதிக்கு உட்பட்ட ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டையம் பேட்டை, பாளையம் பிஜர், நவோப் தோட்டம், டபிள்யூபி ஆர்டி, மங்கல் என்ஜிஆர், தேவர் க்ளின்ஹூர், சுபுதன்ஹோஸ், காவேரி என்ஜிஆர் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரையில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் பட்டாபிராம், சேக்காடு, தந்துறை, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி.நகர், வி.ஜி.என் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ரூ.50 கோடிக்கு நாயா!..வீட்டுக்கே சென்ற ED: கடைசியில்தான் டிவிஸ்ட்!

மின் பராமரிப்பு :

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன. 

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.  இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்து வைத்துக் கொள்ளுங்கள்.