Tamilnadu Powershutdown: தமிழ்நாட்டில் நாளை(27-02-2026)எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது? முழு விவரம்
TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(27-02-2026) மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை உறுதிச்செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் அறிவிக்கப்பட்ட மின் தடையானது செய்ய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை(27-02-2026) எங்கெல்லாம், மின் தடை ஏற்பட போகிறது காணலாம்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
நாளை (27.02.26) எங்கெல்லாம் மின் தடை:
திண்டுக்கல்
கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம் சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி.
திருப்பூர்:
பல்லடத்தை சுற்றியுள்ள வரபாளையம், காட்டூர், எஸ்.என்.பாளையம், பொங்கலூர், ஜி.என்.பாளையம்
தஞ்சாவூர்
கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு
நாமக்கல்:
கபிலராமலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பவுண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கமடம், பஞ்சாபாளையம். சேலூர்-செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமரித்தூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
























