தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளை (07-01-26) எங்கெல்லாம் மின் தடை:

திருவள்ளூர் 

கடம்பத்துார், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை அகரம், வெண்மனம்புதூர்

Continues below advertisement

வேலூர்

நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை, எம்.வி.புரம் 

ஈரோடு

சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்

தருமபுரி

மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், கேல்மொரப்பூர், கணபதிபட்டி, சொக்கம்பட்டி, கீரைப்பட்டி, வேப்பம்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பெரியபட்டி, குத்தாடிப்பட்டி, கோட்டைப்பட்டி, மாவேரிப்பட்டி

கோவை

எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்

திருப்பூர்

உடுமலை பகுதியில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம், ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம் 

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.