"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
பொதுமக்களின் பங்களிப்போடு பிங்க் நிற பெண்கள காவல் உதவி மையம் பொன்னேரியில் திறப்பு.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பிங்க் நிற பெண்கள் காவல் உதவி மையம் பொன்னேரியில் பொதுமக்களின் பங்களிப்போடு திறக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக கடந்த ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட முதலமைச்சர் விஜய்யால் சிங்கப்பெண் சிறப்பு படை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கியவுடன் பல மாவட்டங்களில் இந்த சிறப்பு படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. மக்கள் கூடும் இடங்களில் பெண்களுக்கு எதிராக எந்த ஒரு தவறான செயல்களையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக பிங்க் நிற பெண்கள காவல் உதவி மையம் பொன்னேரியில் பொதுமக்களின் பங்களிப்போடு திறக்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொன்னேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் குற்றங்களை தடுக்கும் நோக்கோடு பொன்னேரி வேம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பிங்க் நிற பெண்கள் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பங்களிப்போடு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் முதல்முறையாகும்.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் எளிதாக காவல் துறையை அணுகி புகார் கொடுக்கும் வசதிக்காகவும் அச்ச உணர்வின்றி காவல் துறையை எளிதாக அணுகவும் பிங்க் நிறத்தில் இந்த பூத் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல் துறையினர் 3 ஷிப்டுகளில் தலா 2 காவலர்கள் என இந்த பிங்க் உதவி மையத்தில் பணியாற்றுவார்கள் எனவும் அந்தப் பகுதியை சுற்றிலும் 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
ட்ரெண்டிங் செய்திகள்






















