மேலும் அறிய

முடி வளர ஆபரேஷன் பண்ணப்போறீங்களா? அரசாங்கம் சொன்னதை படிச்சுட்டு போங்க!

முடி மாற்று அறுவை சிகிச்சையை முறையான பயிற்சியும், அரசு அங்கீகாரமும் இல்லாமல் மேற்கொள்ளும் மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வு. திருமணம் பாதிப்பு, மன அழுத்தம் என பல பிரச்சினைகளை இதனால் எதிர்கொள்வதால் பலரும் முடி உதிர்வு பிரச்சினைக்கு சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஹேர் ப்ளான்டெசென் எனப்படும் முடி வளர்வதற்கான அறுவை சிகிச்சை இன்று இந்தியா முழுவதும் பலராலும் செய்யப்படுகிறது. 

முடி வளர சிகிச்சை:

இந்த முடி வளர்வதற்கான அறுவை சிகிச்சையில் பல போலி மருத்துவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இயங்கி வந்த போலி காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது. இந்த சூழலில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள்:

முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் பொலிவிற்கான ஒழுங்கு முறையைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை, 2022ல் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் லேசா் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். 

மருத்துவ நிறுவனங்கள் பதிவு சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற மையங்களில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் வழங்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது கட்டாயம் ஆகும். அதற்கு முன்பாக சிகிச்சை செய்துகொள்ள உள்ள நபரின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். 

சட்ட நடவடிக்கை:

சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறையால் சிகிச்சை மையங்களில் தொடர் கண்காணிப்புக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகள் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக சிகிச்சைகளை வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுபெற்ற மருத்துவர்கள் சிகிச்சைகளை வழங்கும்போது, உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவறான சிகிச்சை:

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மாறி வரும் வாழ்க்கை முறை, போதிய தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சினை தொடர்ந்து பலருக்கும் அதிகரித்து வருகிறது. இதனால், 20 வயதுகளிலே பலரும் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். 

இதற்கு தீர்வாக முடி மாற்று அறுவை சிகிச்சையை பலரும் மேற்கொள்கின்றனர். அவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளும் சிலர் தவறான மற்றும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதால் அவர்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. 

முடிக்கு சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தாங்கள் சிகிச்சை மேற்கொள்ள உள்ள மருத்துவர் முறையாக மருத்துவம் பயின்றவரா? அரசின் அங்கீகாரம் பெற்றவரா? என்பதை உறுதி செய்தபிறகே மருத்துவம் மேற்கொள்வது நன்மை பயக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குப்பை எரிஉலை அல்ல... அது மெல்லக் கொல்லும் விஷம்!
குப்பை எரிஉலை அல்ல... அது மெல்லக் கொல்லும் விஷம்!" - சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து: அன்புமணி எச்சரிக்கை!
Beach Wedding : வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
" நன்றி MLA சார் " பெரம்பூரில் ஆர்.டி.சேகரிடம் நெகிழ்ந்த கிருஸ்தவ - இசுலாமிய மக்கள்
நாமக்கல் சம்பவம்.. 7 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. இபிஎஸ், டிடிவி தினகரன் விமர்சனம்!
நாமக்கல் சம்பவம்.. 7 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. இபிஎஸ், டிடிவி தினகரன் விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Gautam Gambhir:
Gautam Gambhir: "ரெண்டு பேருக்கு தான் இந்த கப் சொந்தம்" டார்கெட் செய்த கோச், ஜெய் பாய்க்கு நன்றி - கம்பீர் பேச்சு
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
Beach Wedding : வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Embed widget