”காந்தி மண்டபத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஆளுநர் ஈடுபட்டிருந்தபோது, மது பாட்டில் இருந்ததாக ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரகுபதி “ ஆளுநர் மற்றும் அவரது கேமராமேன் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது என தெரிவித்தார். சுத்தம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி சிறப்பாக செய்து வருகிறது. ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். தமிழ்நாட்டில் கமலாலயத்திற்கு போட்டியாக ஒரு இடம் உள்ளது என்றால் , ராஜ்பவன்தான்.
மேலும் அவர் பேசுகையில்” மது ஒழிப்பு மாநில அரசால் முடியாது, மத்திய அரசு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாடு தழுவிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிப்போம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.