• Rain Alert: நாளையும் 4 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கன மழை: எச்சரிக்கையா இருங்க மக்களே! அதிக மழைப்பதிவு இங்குதான்!


தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • CM Stalin: ”சென்னை அனுபவத்தின் மூலம் தென்மாவட்ட மக்களை மீட்போம்” - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி


கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு மக்களிடமிருந்து மனுக்களை பெற்றதோடு, குறகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான் திட்டத்தை  தொடங்கி வைத்து இருக்கிறேன். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்தது. அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், மழைக்கு பிறகு போர்க்கால அடிப்படையிலும் செயல்பட்டு அரசு அதனை எதிர்கொண்டது. மேலும் படிக்க



  • Omni Bus Service: வெள்ளத்தால் திக்குமுக்காடும் தென்மாவட்டங்கள் - ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு..


கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  நேற்று  (டிசம்பர் 17) அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது. மேலும் படிக்க



  • கனமழையில் மூழ்கும் 4 மாவட்டங்கள்! 4 அமைச்சர்களுக்கு அவசர உத்தரவு போட்ட முதலமைச்சர்!


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடுஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் படிக்க



  • Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!


கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக காசிக்கு ஒரு வாராந்திர ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ( டிசம்பர் 17 ) முதல் துவக்கப்பட உள்ளது. இந்த கன்னியாகுமரி - பனாரஸ் - கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை துவங்க இருக்கிறது. இந்த துவக்க விழா சிறப்பு ரயிலை (06367)  ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக துவக்கி வைக்கிறார். மேலும் படிக்க