• Chennai Air Pollution: மோசமான நிலையில் சென்னையின் காற்றின் தரம்.. அளவுக்கு மீறி வெடி வெடிக்க தொடங்கியதால் ஏற்பட்ட விளைவு..!


நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை என்றாலே நமக்கு பட்டாசுகள் தான் நியாபகம் வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிக்க காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை ஒரு மணி நேரம் என  2 மணி நேரம் மட்டுமே நேரக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த கட்டுப்பாட்டை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் ஆண்டுதோறும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் படிக்க



  • Latest Gold Silver Price: ஒரு நாளில் நாடு முழுக்க தங்கம், வெள்ளி ரூ.30,000 கோடிக்கு விற்பனை.. இன்றைய விலை நிலவரம் என்ன?


நாடு முழுவதும் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் 30,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) நாடு தழுவிய வர்த்தகம் (நகைகள் மற்றும் பிற பண்டிகை தொடர்பான விற்பனை) ரூ. 50,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. டெல்லியில் நேற்று மட்டும் ரூ.5,000 கோடி வரை தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • Rain Alert:தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?


11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க



  • 'இந்துக்களின் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வீர்களா முதல்வரே?' - வானதி சீனிவாசன் கேள்வி


பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நாளை (12.11.2023) பாரதம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறார்கள். புத்தாடை, இனிப்பு, விதவிதமான உணவு வகைகள், பட்டாசு என கொண்டாட்டமான பண்டிகை இது. தீபாவளி என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பே குழந்தைகள் உற்சாகமாகி விடுவார்கள். மேலும் படிக்க



  • ஆவினில் 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு! புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்


நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு  சிறப்பாக செயல்பட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, மற்றும் கடன் உதவிகளை வழங்கினார். மேலும் படிக்க