- இந்தியா எந்த ஒரு தனிப்பட்ட கலாசாரம், கொள்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அனைத்து மக்களுக்குமானது என அரசியல் அமைப்பு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு.
- தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப் படிவங்கள் 96.65 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல். 58.70 சதவீத கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- SIR பணிகள் நடைபெறுவதால் வரும் 28-ம் தேதி நடைபெற இருந்த சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- SIR பணிகளை பொறுத்தவரை, பல இடங்களில் அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக அவர்களுக்கு துணை புரிந்து கொண்டிருப்பதாகவும், பிஎல்ஓ அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.94,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவானது ‘சென்யார்‘ புயல். இந்த புயலல் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
- தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 15,000 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும், கடந்த ஆண்டை போலவே உடனடி பாஸ் திட்டத்தை பின்பற்றவும் முடிவு செய்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்.
- ராமேஸ்வரத்தில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, ராமநாதசாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தல்.