• தமிழ்நாட்டில் SIR பணிகளை நேரில் ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகை. குளறுபடி நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இன்று முதல் கள ஆய்வு செய்ய திட்டம்.

  • புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசி மிரட்டியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுவகளின் கீழ் வழக்குப்பதிவு.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது. கிராமிற்கு 110 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 11,520 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,160 ரூபாய்க்கும் விற்பனை. வெள்ளி விலையும் கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 171 ரூபாய்க்கு விற்பனை.

  • தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை வங்கக் கடல் பகுதியில் நாளை(நவ.25) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • கனமழை காரணமாக கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், விருதுநகர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

  • நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

  • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்துவரும் நிலையில், அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி.

  • கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பின. உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம். கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.


 

Continues below advertisement