TN Heat Wave: மக்களே உஷார்! அதிகமாகும் 5 டிகிரி செல்சியஸ்: 3 நாட்களுக்கு அலெர்ட் கொடுக்கும் வானிலை!
இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை (மே 1, 2) :மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க..
Cauvery: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் - அமைச்சர் துரைமுருகன்; கர்நாடகா சொன்னது என்ன?
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டமானது, டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டு அதிகாரிகள், கர்நாடக அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீர் குறித்தும் மழையின் அளவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் படிக்க..
அரோகரா அரோகரா கோஷம்... காஞ்சி குமரக்கோட்டம் வெள்ளி தேர் உற்சவம் - முருக பக்தர்கள் பரவசம்
காஞ்சிபுரம் என்றாலே கோவில் நகரமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் பல்வேறு திருத்தலங்களும் பரிகார தளங்களும் அமைந்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சித்திரை மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி வெள்ளி தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு வள்ளி தேவயாணி சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருள செய்தனர். மேலும் படிக்க..
Labor Day Wishes: ”உன் கையை நம்பி உயர்ந்திட பாரு..” உழைப்பாளர் தினத்திற்கு வாழ்த்து மழை பொழிந்த அரசியல் கட்சி தலைவர்கள்!
இன்று மே தினம் கொண்டாடப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
Mettur Dam: வாட்டி வதைக்கும் வெயில்... மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 82 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 82 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க