• முதலமைச்சர் விஜயின் கேரள பயணம் பாதுகாப்பு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் ரத்து என தகவல்
  • தஞ்சையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின், “நாம் சோகத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என ஸ்டாலின் பேச்சு
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை
  • வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கு விற்பனை 
  • "நம்ம கட்சி ஒரு குழந்தை கட்சி தான், ஆனா பெரிய பெரிய ஜாம்பவான்கள், கட்சிகளையெல்லாம் தூக்கி அடிச்சிட்டு வந்துருக்கோம். ஆளுங்கட்சி ஒரு ஆட்டம் ஆடி பாக்கலாமானு நெனைக்காதீங்க மக்கள் பாத்துட்டு தான் இருக்காங்க.. முன்னாடி எப்படி இருந்தோமோ அதே மாதிரி தான் இருக்கனும்" - கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அட்வைஸ்

  • " அமைச்சர்ன்னு எல்லாம் பாக்காதீங்க.. நானும் இங்கே விளையாடி இருக்கேன்.. என்ன வேணுமோ கேளுங்க.." - நேரு ஸ்டேடியத்தில் ஆய்வு செய்து விளையாட்டு வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..
  • கோடை காலத்தில் பெய்யும் திடீர் கனமழையில் மக்கள் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை
  • திருச்சியில் பூக்கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கல்லூரி மாணவர்கள் அரெஸ்ட்..!
  • நீலகிரி: கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மே பீல்டு லைன்ஸ் பகுதியில் சிறுத்தை சடலமாக கண்டெடுப்பு உடற்கூராய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல்
  • கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே, ஓட ஓட விரட்டப்பட்டு இளைஞர் கத்தியால் குத்திக் கொலை; மூவரைக் கைது செய்து போலீசார் விசாரணை
  • உதகையில் 128வது மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்குகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் 50,000 தொட்டிகளில் 5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை.
  • விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் முதியவர் கைது
  • திருச்சி வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
  • தேனி: கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்தொடங்கியதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று முதல் வனத்துறை அனுமதி
  • கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த மூவர் கைது