- திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவுவைக்கப்பட்டுள்ளது.தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவுவைப்பு
- தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை; கோவை, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி..திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு
- ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு; வர்த்தக துறை கூடுதல்தலைமைச்செயலராக விஜயகுமார். உயர்கல்வித்துறை செயலராக அருண் ராய் நியமனம்
- தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58%இல் இருந்து 60%ஆக உயர்வு; ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு
- தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; சைபர் கிரைம் தடுப்பு பிரிவு டிஜிபியாக பால நாகதேவி, உளவுத் துறை டிஐஜியாக தர்மராஜன் நியமனம்.
- நேற்று வெளியாக வேண்டிய 'கருப்பு‘ திட்டமிட்டபடி வெளியாகாத நிலையில், இன்று(மே 15) வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்த நடிகர் சூர்யா
- 'நீட்' மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 25 பேர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக கைது.
- இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.103.67க்கு விற்பனை; டீசல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.95.25க்கு விற்பனை செய்யப்படுகிறது
Tamilnadu Round Up: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி.. தமிழக மகளிர் மகிழ்ச்சி
ஜேம்ஸ் | 15 May 2026 10:07 AM (IST)
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Published at: 15 May 2026 10:07 AM (IST)