மேலும் அறிய
Tamilnadu Round Up: சபாநாயகர் பதவியேற்பு, எகிறிய தங்கம் விலை, உயர்நீதிமன்றம் தீர்ப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களில் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் விலை 230 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- வெள்ளி விலை கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக தவெக எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வாகி பதவியேற்றார்
- தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவராக முசிறி சட்டமன்ற உறுப்பினர் ரவி சங்கர் தேர்வு
- விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு -சி.வி.சண்முகம் பிரிவு அறிவிப்பு
- எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க திமுக ஆதரவளித்து பேச்சுவார்த்தை நடத்தியது - சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு
- அதிமுக பொதுக்குழுவை கூட்டி தொடர் தோல்விக்கான காரணங்களை விவாதிக்க வேண்டும்” -சி.வி.சண்முகம்
- நாகர்கோவில்: முதலமைச்சராக விஜய் பதவியேற்க தாமதம் ஏற்பட்டபோது, கடந்த 9ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த தவெக நிர்வாகி இசக்கியப்பன் (45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
- திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சீனிவாச சேதுபதி அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை கோரி, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்தார் - புதுக்கோட்டையில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.25 கோடி மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி கைது
- முதலமைச்சர் விஜய்யுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு.. மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத் தருவதாக முதல்வர் விஜய் உறுதி
Before You Go
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion






















