- சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப் படுத்தியுள்ள திமுக. விசிக மற்றும் மநீம கட்சிகளுடன் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை.
- NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் விவாதிக்க இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி - தொகுதிகளின் எண்ணிக்கை இன்றே இறுதியாகும் என தகவல்
- திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்ததாக தகவல்
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 சரிந்து ரூ.1,25,280க்கு விற்பனையாகிறது
- "அடுத்த முறையும் திமுக வரவேண்டும் என்பது ஆசை அல்ல, தேவை" முதலமைச்சரின் 73வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு
- மாணவர்களுக்கான தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம். 8.27 லட்சம் மாணவர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர் - இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளன.
- பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
- சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து - புறப்பாடு விமானங்கள் 18 மற்றும் வருகை விமானங்கள் 18 ன மொத்தம் 36 விமானங்கள் ரத்து. மத்திய கிழக்கு நாடுகளில் பார் பதற்றம் காரணமாக 3வது நாளாக விமான சேவை பாதிப்பு
- சென்னை எண்ணூரில் குட்டையை குளமாக மாற்றி படகு சவாரி - மேயர் பிரியா, சுதர்சனம் எம்.எல்.ஏ பயணம் செய்து தொடங்கி வைத்தனர்
- திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
- உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் ஓரம் நின்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
