AIADMK: தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம் - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஓபிஎஸ்!


தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்,ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்”எனவும் ஓபிஎஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


KP Munusamy: ”அதிமுகவினரை அழைக்க ஓ பன்னீர்செல்வத்திற்கு எந்த அருகதையும் கிடையாது” - கே.பி முனுசாமி..


அதிமுக அலுவலகத்தை உடைத்து பொருட்களை திருடி சென்றவர் ஓ பன்னீர்செல்வம் என அதிமுக துணைப் பொதுச் செயலாளார் கே.பி முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவினரை அழைக்க ஓபிஎஸ்க்கு உரிமையில்லை என அதிமுக துணைப் பொதுச்செயலாளர்  கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.


Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு


விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் நல்ல முறையில் வாக்குகளை பெற்றுள்ளனர். மத்திய சென்னையை தவிர மற்ற தொகுதிகளில் நிறைய வாக்குகள் கிடைத்துள்ளது. விருதுநகர் விஜய பிரபாகரன் கடைசி வரை போராடி தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எத்தனையோ தேர்தல்களை நாங்கள் சந்தித்துள்ளோம். தோல்வி என்பது புதிதல்ல” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


TN Weather Update: இன்று 19 மாவட்டங்கள் .. எங்கெல்லாம் மழை வெளுக்கப்போகிறது?


தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில்  அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,   நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து விளக்கம்...


அண்ணாமலை ஆரம்பத்தில் விமர்சனம் செய்ததால் தான் கூட்டணி போனது. அண்ணாமலை அவர் தலைவர் பதவியை பார்த்து கொள்ளட்டும். பாஜகவை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளோம். பாஜக பொய்யை சொல்லி தான் வாக்குகள் சேகரித்தது. அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வரும். இந்த தோல்வியாக் அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். இந்த தோல்வி வெற்றிக்காக படுகட்டு தான்” எனத் தெரிவித்தார்.


TNSET 2024: மாநில தகுதித் தேர்வு ஒத்திவைப்பு; மனோன்மணியம் பல்கலை. அறிவிப்பு


உதவிப் பேராசிரியர்கள் பணியில் சேர நடத்தப்படுவதாக இருந்த மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.