பிரதமராவாரா ஸ்டாலின்? - செய்தியாளர் கேள்விக்கு கலைஞர் பாணியில் பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதியை வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியையும் சேர்ந்து நாற்பதுக்கு நாற்பதை மக்கள் கொடுத்திருக்கின்றனர். அப்போது ஸ்டாலின் பிரதமராவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “கலைஞர் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். என் உயரம் என்ன என்று எனக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.
40-ம் நமதே.. தட்டித் தூக்கிய திமுக: கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி மறைந்த பின் தலைவராக 2018ஆம் ஆண்டு பொறுப்பேற்றது தொடங்கி 2019 மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் இந்தத் தேர்தலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 சதவீத வெற்றியை தேடித் தந்துள்ளதாக திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்" வெற்றி பெற்ற கையோடு டி.ஆர்.பாலு சொன்னது என்ன?
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட டி. ஆர். பாலு வெற்றி பெற்றார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி ஆர் பாலு கூறுகையில், ”தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40/40 வெற்றி பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி, பல எழுத்துக்கணிப்புகளை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டாலும் அதனால் உங்கள் மீது வருத்தம் இல்லை. முதலமைச்சர் டெல்லி செல்கிறார் நானும் செல்கிறேன், மாலை நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறோம், இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பேசி நல்ல ஒரு அறிவிப்பை தெரிவிப்பார்கள் கண்டிப்பாக இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். இதுவரை 7 முறை நாடாளுமன்றத்திற்கும் ஒரு முறை மேல் சபைக்கும் சென்றுள்ளேன் மிக்க மகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.
மக்களே! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - தலைநகர் சென்னையில் எப்படி?
தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில், ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.